மதம் பிடித்த யானையை அடக்கிய இளையராஜா.. இந்தப் பாடலை கேட்டா? இது எப்போ நடந்தது?
CineReporters Tamil February 01, 2025 10:48 PM

சாதனைக்கு சொந்தக்காரர்: ஏற்கனவே சாதனைக்கு மேல் சாதனை செய்து வரும் இளையராஜா இப்போது இந்தியாவில் முதன் முறையாக 35 நாட்களில் ஒரு சிம்பொனியை உருவாக்க முடியும் என நிரூபித்து காட்டியிருக்கிறார். இதைப் பற்றி நாம் தேடும்பொழுது வருஷ கணக்கில் சிம்பொனியை எழுதி இருக்கிறார்கள். ஒரு சில பேர் ஒரு சிம்பொனியை உருவாக்க 14 வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.


சிம்பொனி இசை: ஆனால் இளையராஜா 35 நாட்களில் ஒரு சிம்பொனி இசையை உருவாக்கி இருக்கிறார். 35 நாட்களில் எப்படி இளையராஜாவால் இதை சாத்தியப்படுத்த முடிகிறது .அதனால் தான் அவர் அந்த உயரத்தில் இருக்கிறார் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதைப் பற்றி இளையராஜாவிடம் கேட்டபோது இளையராஜா சொன்ன பதில் இதோ:.இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். சார் வந்து சாதாரண ஆள் இல்லை என்று. ஆனால் வெளியில் உள்ளவர்களுக்கு இதைப்பற்றி போற்றுவதற்கோ புகழ்வதற்கோ மனசு வரல .

போட்டி போடுவேன்: வயிறு தான் எரிகிறது. எல்லாருடைய மனதும் மாசடைந்து விட்டது. மனம் திறந்து பாராட்டுவோம் என்ற எண்ணம் வரவில்லை. மனசு சுத்தமா இருந்தா தானே வெளியில் தெரியும். அப்படி யாருக்குமே இல்லை. ராஜா சார் ராஜா சார் தான் என இன்னும் நீங்கள் சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் .வேற வழி இல்லை. இப்போது வரும் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூட நான் போட்டி போடத்தான் செய்வேன். ஹார்மோனியம் அறிமுகப்படுத்தியது, மெலோடி அறிமுகப்படுத்தியது என எத்தனையோ அம்சங்களை நான் செய்திருக்கிறேன்.

மதம் பிடித்த யானையை அடக்கிய இசைஞானி: ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ பாட்ட கேக்குறதுக்கு யானை கூட்டம் வந்திருக்கு. உலகத்துல சரித்திரத்துல எந்த தலைசிறந்த கம்போசர்களின் வாழ்க்கையில் இப்படி நடந்தது உண்டா? ஒரு குழந்தைக்கு உயிர் வந்ததும், ஒரு யானை கூட்டம் வந்து பாட்ட கேட்டு போனதும், மதம் பிடிக்கப் போன ஒரு யானை வந்து பாட்டை கேட்டு தூங்கினதும் எங்கேயாவது நடந்திருக்கா? உங்க இசையில் ஏதோ ஒரு அப்பாற்பட்ட சக்தி இருக்கிறதா என நீங்கள் கேட்கிறீர்கள்.


எவனும் செய்யல: இதை நானே சொல்லிக்கிட்டால் அவருக்கு ரொம்ப தலகணம் என்று முத்திரை குத்தி விடுவார்கள். எனக்கு வராம வேற எவனுக்கு டா வரும் ?எனக்கு தான்டா வரணும் கர்வம். எனக்கு தான் திமிரு ஜாஸ்தியா இருக்கணும். ஏனெனில் உலகத்திலேயே யாரும் செய்யாததை நான் செய்து கொண்டிருக்கிறேன் .உலகத்தில் யாரும் செய்ய முடியாததை செய்து கொண்டிருக்கிறேன்.

எனக்குத் திமிர் இல்லாம எப்படி இருக்கும். இதையெல்லாம் நினைக்கும் பொழுது எனக்கு திமிர் வருமா இல்லையா? ஆனா எனக்கு திமிர் இல்ல. வெளியில் இருந்து சொல்றாங்க. எனக்கு திமிரு இருக்குன்னு .அப்போ அவனுக்கு எவ்வளவு திமிரு இருக்கணும். நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துக்கிட்டு நீ என்ன வேண்டுமாலும் பேசிக்கோ. நான் என் வேலைய பாத்துட்டு இருந்தா ரொம்ப கர்வம் ஜாஸ்திடா அவருக்கு என்று சொல்கிறார்கள். கர்வம் என்பது எப்போ வரும்.

நல்லதாக ஒரு வேலையை பண்ணிட்டா உனக்கு கர்வம் வரும். நீ ஒண்ணுமே பண்ணாம அவருக்கு மட்டும் கர்வம் இருக்குனு சொன்னா இருக்கத்தான் செய்யும் என கூறியிருக்கிறார் இளையராஜா:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.