“3 வருஷமா 16 வயது சிறுமி அனுபவச்ச கொடுமை”.. வலுக்கட்டாயமாக 3 முறை பெற்ற மகளையே கதற கதற.. காமக்கொடூரனாக மாறிய தந்தை..!!
SeithiSolai Tamil February 02, 2025 01:48 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 வயது கூலி தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய சொந்த மகளுக்கே கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதோடு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிறுமியை வலுக்கட்டாயமாக 3 முறை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த அந்த தந்தையை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.