பையனுக்காக நோ சிபாரிசு... அவனாகவே கஷ்டப்பட்டு வரட்டும்... பிரபுதேவாவா இப்படி சொல்றது?
CineReporters Tamil February 01, 2025 08:48 PM

இந்தியாவின் 'மைக்கேல் ஜாக்சன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பிரபுதேவா. நடன இயக்குனர் மட்டும் அல்லாமல் நடிகர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர். ஆரம்பத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு நடனம் ஆடிவிட்டுச் செல்வார்.

இதயம் படத்தில் 'ஏப்ரல் மேயிலே' பாடலும், சூரியனில் 'லாலாக்கு டோல் டப்பிமா', ஜென்டில்மேன் படத்தில் 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே' பாடலும்தான் இவரை அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் உற்று நோக்க வைத்தது.

வேகமான டான்ஸ் ஸ்டெப்புகள்: அதன்பிறகு இயக்குனர் ஷங்கரின் காதலன் படத்தில் அறிமுகம் ஆனார். படத்தில் அவரது நடனத்துக்காகவே பல காட்சிகள், கதை அம்சங்கள் இருந்தன. ஊர்வசி, முக்காப்புலா, கோபாலா கோபாலா ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டாசாய் தெறித்தன. இளம் ரசிகர்கள் அவரைப் போலவே மேடைகளில் ஆடி அப்ளாஸ் பெற்றனர். வேகமான டான்ஸ் ஸ்டெப்புகள் இருந்ததால் இவரது நடனம் வேற லெவலில் இருந்தது.


போக்கிரி: அந்த வகையில் பல படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார். விஜய் நடித்த போக்கிரி படத்தையும் இயக்கி அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தார். அந்த வகையில் இன்று வரை தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தபடி திரையுலகில் உலா வருகிறார் பிரபுதேவா.

நடனப்புயலான இவர் தனது வாரிசை சினிமா உலகில் களம் இறக்குவாரா? இந்தக் கேள்விக்கான பதிலை அவரே சொல்கிறார் பாருங்க.

என் பையனுக்கு சினிமான்னாலே பிடிக்கவே பிடிக்காது. என்னோட டான்ஸ் ரிகர்சல். வாடான்னு சொன்னா போர் பா நீ ஆடி நான் என்ன பார்க்குறதுன்னு சொல்வான். ஆனா திடீர்னு ஒரு வருஷத்துக்கு முன்னாடி, எனக்கு போன் பண்ணி அப்பா நான் ஹீரோ ஆகணும்னு சொன்னான். எனக்கு ஒரே ஆச்சரியமா இருந்தது.

சிபாரிசு பண்ண மாட்டேன்: ஏன்னா சினிமா ரொம்ப கஷ்டம். அவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல. அவன் இஷ்டம். அவன் அதுக்கான கடின உழைப்பு பண்ணி அவனாவே வரணும். நான் சிபாரிசு எல்லாம் பண்ண மாட்டேன் என்கிறார் பிரபுதேவா.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.