தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலமாக பல்வேறு துறைகளில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாகவும், தொழில் முனைவோர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் விதமாகவும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ட்ரோன் எந்திரம் இயக்க பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
குறைந்தபட்ச கல்வி தகுதி பெற்றிருக்கும். அதாவது பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தக நிறுவனத்தில் 18/ 3/2025 முதல் 20/3/2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதிவு செய்வது அவசியம். https://www.editn.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்