இந்தியாவில் வருமான வரி என்பது ஒரு தனிநபர் அல்லது வணிகம் ஒரு நிதியாண்டில் ஈட்டும் வருமானத்திற்கு ஏற்ப விதிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகப்படியான வருமானம் ஈட்டுபவர்கள் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டியது அவசியம். வருமான வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு சட்டப்படி கூடுதல் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் தனி நபர்களின் வருமானத்தை சரிபார்க்க தற்போது இந்தியாவில் வருமானவரித்துறை ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த இருக்கிறது.
அதாவது ஒரு தனிநபர் தன்னுடைய தனிப்பட்ட வருமானம் மற்றும் சொத்துக்கள் பற்றிய விவரத்தை முறையாக வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இதில் அதிகாரிகளுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் அவர்களுடைய மின்னஞ்சல், வங்கி மற்றும் சமூக வலைதள பயன்பாடுகளை சோதனை செய்வார்கள். இதற்காக அவர்களுடைய சமூக வலைதள பக்கம் ஹேக் செய்யப்படும். மேலும் இந்த புதிய நடைமுறை 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.