வாரிசு நடிகை என்கிற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் நடிகை வரலட்சுமி. சரத்குமாரின் மகள் என்பதால், இவருக்கு அவரின் அப்பா எந்த ஒரு வாய்ப்பையும் வாங்கி கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய கடின முயற்சியாலும், தோல்விகளின் வலியையும் கடந்தே இன்று தென்னிந்திய திரையுலகில், திறமையான நடிகை என்பதை வரலட்சுமி சரத்குமார் நிரூபித்துள்ளார்.
இவர் ஹீரோயினாக அறிமுகமானது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சிம்பு ஹீரோவாக நடித்த 'போடா போடி' திரைப்படம் மூலம் தான். இந்தப் படத்தில் அவர் ஒரு டான்சராக நடித்திருந்தார். இவர் ஏற்று நடித்த கதாபாத்திரமும் இவருக்கு பக்காவாக பொருந்தி இருந்தது. இதை தொடர்ந்து, தமிழில் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, கன்னி ராசி, மத கஜ ராஜா என்று பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
ஒரு ஹீரோயினாக இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும், குணச்சித்திர நடிகையாகவும், வில்லி கதாபாத்திரத்திலும் தொடர்ந்து மிரட்டி வருகிறார். தற்போது இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். சர்கார் படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து வரலட்சுமி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தன்னுடைய 39 வயதில், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று பிரிந்த நீண்ட நாள் நண்பரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கூட சினிமாவில் ஒருபக்கம் கவனம் செலுத்தி வந்தாலும், பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உருவாகி உள்ள, டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் நடுவராக கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 25 வயது நிரம்பிய, 3 குழந்தைகளுக்கு அம்மாவான போட்டியாளர் ஒருவர் கலந்து கொண்டார். அப்போது அவர், எனக்கு ம்யூசிக் கேட்டாலே டான்ஸ் தன்னால வந்துடும். இதுவரையிக்கும் நான் ரோட்டில் தான் டான்ஸ் ஆடி இருக்கேன் என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
இதைக் கேட்ட வரலட்சுமி, ஒரு உண்மையை சொல்கிறேன். இதுவரைக்கும் யாரிடமும் அவர் சொன்னது இல்லை. இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதையும் தாண்டி திறமையை வெளிக்காட்டக் கூடிய ஒரு டான்ஸ் நிகழ்ச்சி. அதனால இந்த ரகசியத்தை சொல்கிறேன். நான், சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாக நான் ரூ.2500 ரூபாய்க்கான முதன் முதலில் ஒரு ஷோவில் ரோட்டில் டான்ஸ் ஆடினேன் என கூறியுள்ளார்.
ரோட்டில் ஆடுகிறோம் என்று தப்பா நினைக்காதீங்க. நான் ஆரம்பித்தது ரோட்டில் தான் டான்ஸ் ஆடினேன். ஆகையால் கண்டிப்பாக நீங்களும் பெரிய இடத்திற்கு வருவீங்க என்று அவருக்கு வரலட்சுமி சரத்குமார் நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.