சமையலுக்கு முக்கியமான பொருட்களில் ஒன்று வெங்காயம். இந்த வெங்காயம் சமையலுக்கு மட்டும் பயன்படாமல் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. அதுகுறித்து இந்தப் பதிவில் காண்போம். வெங்காய தோலில் விட்டமின் சி ,ஈ ,ஏ போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளது.
இது தோல் பிரச்சினைகளை குணமாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், வெங்காய தோலில் மிகவும் குறைவான அளவு கலோரிகள் இருப்பதால் இந்த வெங்காய தோலை வைத்து டீ தயாரித்து குடித்தால் கட்டாயம் உடல் எடை குறையும்.
மேலும், இந்த தோலில் உள்ள பிளவனாய்டுகள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமல்லாமல் இதய நோய் வராமல் தடுக்கிறது. வெங்காய தோலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், நமக்கு சளி தொல்லை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
அதிலும் குறிப்பாக, நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களாக இருந்தால், கட்டாயம் உங்கள் பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில், நீங்கள் பைல்ஸ் பிரச்சனையால் அவதிப்படுபவராக இருந்தால், உங்களுக்கு வெங்காய தோல் தலையணை நிரந்தர தீர்வு கொடுக்கும்.