தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு திமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பாக சென்னை மேயர் பிரியாவிடம் கேட்கப்பட்டது. இது பற்றி அவர் கூறியதாவது, முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் இது போன்ற குற்றச்சாட்டுகள் தேவையற்றது என்று கூறினார்.