கடந்த முறை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைக்க பாடுபட்டோம் என்றும் இந்த முறை தமிழகத்தில் தி.மு.க. அரசை அகற்ற வலிமையான கூட்டணியை அமைப்போம் என ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு 2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலுக்கு தற்போது அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக ,அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி நசெய்து வந்தது. தற்போது நடிகர் விஜய் அரசியலில் குதித்து உள்ளதால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.தமிழகத்தில் அதிமுக ,திமுக என்ற நிலை மாறி விஜய் என்ற நிலை உருவாகுமா என்பதை 2026 சட்டசபை தேர்தல் முடிவுகளில் தெரியும்.
இந்தநிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோவையில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடந்த முறை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைக்க பாடுபட்டோம் என்றும் இந்த முறை தமிழகத்தில் தி.மு.க. அரசை அகற்ற வலிமையான கூட்டணியை அமைப்போம் என ஜி.கே.வாசன் கூறினார்.அதனை தொடர்ந்து பேசிய அவர் "பணக்கார மாணவர்கள் மட்டும் தனியார் பள்ளிகளில் இந்தி மொழி படிக்கும் நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்தி கற்க முடியவில்லை என்பது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் மாணவர்களின் கல்வி உரிமையை தடுக்கக்கூடாது என பேசிய ஜி.கே.வாசன் ,மும்மொழி கொள்கைக்காக போராடுபவர்களை கைது செய்வது கட்டணத்துக்கு உரியது என்றும் இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல என கூறினார்.
மேலும் மும்மொழி கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் நடத்தினால் கைது செய்வோம் என்று கூறுபவர்கள், நீட் தேர்வு வேண்டாம் என்பது குறித்து கையெழுத்து இயக்கம் நடத்தியவர்களை கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பிய ஜி.கே.வாசன் ,தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பெண்கள் வெளியில் அச்சமின்றி, பாதுகாப்பாக நடமாடுவதை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என கூறினார் .
மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என சுட்டிக்காட்டிய ஜி.கே.வாசன் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை கவலைக்கு உரியதாக உள்ளதாக கூறினார்.
மேலும் மும்மொழிக் கொள்கை விஷயத்தில் போராட்டம், தொகுதி மறு சீரமைப்பு பிரச்சனை ஆகியவற்றை கையில் எடுப்பதன் மூலம் மற்ற பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப பார்க்கிறார்கள் என செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு மூலம் இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை என்றும் இன்று அதை எதிர்ப்பவர்கள் பாராளுமன்ற புதிய கட்டிடம் திறந்தபோது அது குறித்து பேசாதது ஏன்?என கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழக அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதால் இதுபோன்ற பிரச்சனைகளை பேசி வருகிறார்கள் என குற்றம்சாட்டியா ஜி.கே.வாசன், இதை மறைக்கவே தி.மு.க. நாடகமாடுகிறது என கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய ஜி.கே.வாசன் ,கடந்த முறை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைக்க பாடுபட்டோம் என்ற வகையில், இந்த முறை தமிழகத்தில் தி.மு.க. அரசை அகற்ற வலிமையான கூட்டணியை அமைப்போம்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
அப்போது மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநில பொதுசெயலாளர் வி.வி.வாசன், குனியமுத்தூர் ஆறுமுகம், சிகாமணி, அருணேஸ்வரன், செல்வராஜ், ராமலிங்கம், ஞானசேகரன், வேணுகோபால், கார்த்திக் கண்ணன், வளர்மதி கணேசன், சார்லஸ் பட்டாபி ஆகியோர் உடன் இருந்தனர்.