பொதுவாக காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான வெயிலில் வைட்டமின் டி அதிகமாகக் கிடைக்கும். எனவே குறைபாடு அதிகமாக உள்ளவர்கள் இந்த நேரங்களில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது நன்மை பயக்கும்.இந்த வைட்டமின் டி யின் பாதிப்பு பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.நம் உடலில் வைட்டமின் டி குறைந்தால் அடிக்கடி நோய் ஏற்படுதல், நிலையான சோர்வு, மனநிலை மாற்றங்கள், உண்டாகும்
2.மேலும் பதட்டம், மனச்சோர்வு, முடி உதிர்தல், தோல் வெடிப்பு, முகப்பரு, எலும்புகள் பலவீனமடைதல், மூட்டுப்பகுதிகளில் வலி, தலை இழுப்பு, தீவிர கால் வலி போன்ற பிரச்சனைகள் உண்டாகும் .
3.வைட்டமின் D என்பது ஒரு செறிவான நோய் எதிர்ப்புத்திறன் ஊக்கியாக இருப்பதால், குறைவான அளவில் அது இருப்பது, நிமோனியா தாக்கம் உருவாவதை ஊக்குவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்
4.பெரும் பாலானவர்களிடம் வைட்டமின் D பற்றாக்குறை காணப்படுகிறது. நோய் எதிர்ப்புத்திறனை பராமரிக்கவும் மற்றும் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், கரையக்கூடிய இக்கொழுப்பு வைட்டமின் இன்றியமையாததாக இருக்கிறது.
5. நமது உடலில் நோய் எதிர்ப்புத்திறன்
தற்காப்பு அம்சங்களை தூண்டி விட்டு செயல்படுத்துவதற்கு இது மிக முக்கியமானதாகத் திகழ்கிறது. 6.எலும்புகளையும், சதைகளையும் வலுவாக்குகிற கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை நமது உடலில் ஒழுங்குமுறைபடுத்தவும் வைட்டமின் D உதவுகிறது.
7.நமது உடலில் வைட்டமின் D-ஐ உயர்த்துவதற்கு முட்டைகளும் கோழி இறைச்சியும் பங்களிப்பை செய்கின்றன.