மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த டீயின் ஆரோக்கிய ரகசியம்
Top Tamil News March 10, 2025 10:48 AM

பொதுவாக க்ரீன் டீ என்று பலரால் அழைக்கப்படும் இந்த டீ நம் மன அழுத்தத்தை குறைத்து நம் இதயம் ,நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது .இந்த டீயின் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.ஒரு கப் க்ரீன் டீ நரம்புகளைத் தளர்வடையச் செய்வது மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டையும் அதிகரித்து, செல் சேதத்தைக் குறைக்கிறது.
2.மேலும், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், மன அழுத்தத்தை குறைத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
3.கிரீன் டீயில் காஃபீன் குறைந்தளவு மட்டுமே இருப்பதால் படுக்கைக்கு செல்லும் முன் குடிக்கலாம்.மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

4.இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் வாய், இரைப்பை, கணையம், நுரையீரல், குடல், தொண்டை மற்றும் மார்பு புற்று நோயிலிருந்து பாதுகப்பளிக்கின்றது.

5. தேநீர் அருந்துபவர்கள் தேநீர் அருந்தாதவர்களை விட 40 சதம் வீதம் குறைவாகவே ‘மாரடைப்பு நோயால்'(Heart Attack) பாதிக்கப்படுகின்றனர்.

6.பற்சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கட்டுப்படுத்த இதில் இயற்கையாக உள்ள ஃபுளோரைடு பயன்படுகிறது.

7.எலும்புவளர்ச்சிக்கு அவசியமான மேங்கனீஸும் இருதய துடிப்பை கட்டுப்படுத்தும் போட்டாஷியமும் இதில் அபரிதமாக உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.