2025 ஹோண்டா CB350 தொடர் – ராயல் என்ஃபீல்டுக்கு டஃப் கொடுக்கும் ஹோண்டா: புதிய அம்சங்களுடன் மிரட்டும் ஹைனஸ் இந்திய சந்தையில் அறிமுகம்!
Seithipunal Tamil March 10, 2025 04:48 AM

ஜப்பானின் பிரபலமான வாகன நிறுவனம் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI), தனது 2025 CB350 தொடரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் CB350 ஹைனெஸ், CB350, CB350RS ஆகிய மாடல்கள் புதிய வண்ண தேர்வுகளுடன் மற்றும் OBD-2B தரநிலைகளுக்கு ஏற்ற எஞ்சின் மேம்பாடுகளுடன் வந்துள்ளன.

விலை மற்றும் கிடைக்கும் இடங்கள்

  • CB350 ஹைனெஸ்: ₹2.11 - ₹2.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
  • CB350: ₹2.00 - ₹2.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
  • CB350RS: ₹2.16 - ₹2.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
  • இந்த புதிய மாடல்கள் ஹோண்டாவின் பிக் விங் டீலர்ஷிப்புகள் மூலமாக விற்பனை செய்யப்படும்.

புதிய அம்சங்கள் & மேம்பாடுகள்

 348cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் (OBD-2B தரநிலைக்கு இணங்க)
 பவர்: 20.7bhp | முறுக்குவிசை: 29.4Nm
 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் + ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச்
 CBS மற்றும் Dual-Channel ABS பிரேக்கிங் சிஸ்டம்
 முழு LED லைட்டிங், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்
 புதிய வண்ண விருப்பங்கள் & மேம்பட்ட ஸ்டைலிங்

மாடல் வாரியாக மாற்றங்கள்

 CB350 ஹைனெஸ் – மாடர்ன்-கிளாசிக் டிசைன், புதிய வண்ண விருப்பங்கள்
 CB350 – இரண்டு வகைகளில் (DLX & DLX Pro), கிளாசிக் ஸ்டைலிங்
 CB350RS – ஸ்போர்ட்டி லுக்குடன், சிங்கிள் சீட், லைட்டர்வெயிட் டிசைன்

போட்டியாளர்கள் & எதிர்பார்ப்பு

இந்த புதிய CB350 தொடர், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, மெட்டியோர் 350, ஜாவா 42 & Yezdi Roadster போன்ற மாடல்களுக்கு கடுமையான போட்டியை வழங்குகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.