ஆந்திரா பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண் கல்விக்கு முக்கியத்துவமில்லை என்றும் தமிழ்நாட்டில் பெரியாரால் தான் பெண் கல்வி கிடைத்து என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் குண்டு எறிதல் கைப்பந்து உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டது .இதன் பரிசளிப்பு விழாவானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ,மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மேயர் சுஜாதா ,மாநகராட்சி ஆணையர் ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி விழாவில் பேசுகையில் பெண் கல்வியை முன்னெடுத்தது பெரியாரும் சுய மரியாதை இயக்கமும் தான் பெண்களுக்கு தமிழகத்தில் கல்வி கிடைத்து முதல் பெண் மருத்துவரானார் ,முத்து லட்சுமி ரெட்டி இதே போல் கேரளாவிலும் பெண் கல்விக்காக பல போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டன ,ஆகையால் தான் தமிழகம் பெண் கல்வியில் சிறந்த விளங்குகிறது, இதற்கு காரணம் பெரியார்,
அதன் பின்னர் முதல்வராக இருந்த கருணாநிதி பெண்களுக்கு 35 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கினார். இப்போது உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வழங்குகிறோம். ஆனால் தமிழகத்தை பிறமாநிலங்களுடன் ஒப்பிடும் போது ஆந்திரா பீகார் போன்ற மாநிலங்கள் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை இதனால் அம்மாநில பெண்கள் கல்வி அறிவு இன்றி இருக்கின்றனர் .பெண்கள் தமிழகத்தில் முன்னேற்றம் அடையவும் கல்வியை பெறவும் முழு காரணம் பெரியார் தான் என்பதை நீங்கள் படித்து அறிந்துகொள்ள வேண்டுமென அமைச்சர் துரைமுருகன்பேசினார்.