வேலூர் அருகே மூதாட்டி சிறுக சிறுக சேர்த்த வைத்த பணம் மற்றும் நகை கொள்ளை..சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை!
Seithipunal Tamil March 10, 2025 09:48 AM

வேலூர் மாவட்டம் சிறு காஞ்சி அருகே மூதாட்டி சிறுக சிறுக சேர்த்த வைத்த பணம் மற்றும் நகைகளை திருடி சென்ற நபரை  போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து  வலை வீசி தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் சிறு காஞ்சி  பகுதியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வரும்  மினி அம்மாள் 70 வயது மூதாட்டி. கூலி வேலை செய்து தனியாக வசித்து வருகிறார். அந்த மூதாட்டி உடல்நிலை குறைவால் அவரது உறவினர் வீட்டுக்கு சென்று தங்கி வந்துள்ளார். அப்போது  கடந்த 6-ஆம் தேதி அவரது அண்ணன் மகன் உடல்நிலை சரியில்லாத அத்தையை காண  வீட்டிற்கு சென்றபோது  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு முழுவதும் கலைந்திருந்த நிலையில் அவரது அத்தையிடம் கால் செய்து வீட்டை திறந்து விட்டு எங்கே சென்றீர்கள் எனக் கேட்டுள்ளார். 

 அதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்து  வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்டது தெரிய வந்தது .இதுகுறித்து அரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த மூதாட்டின் வீட்டிலிருந்து 4.5 சவரன் நகை மற்றும் 22,000 பணம் திருடி சென்றது தெரிய வந்தது.

 இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அடையாளம் தெரியாத ஒரு நபர் முகத்தில் துளியை கட்டிக்கொண்டு உலா வந்தது தெரிய வந்தது. அந்தப் பகுதி முழுவதும் நோட்டமிட்டு வந்த அந்த மர்மநபர்  யாரும் இல்லாத வீட்டை பார்த்து பூட்டை உடைத்தது கொள்ளையடித்தது தெரிய வந்தது. அதே போன்று அந்தப் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டை பூட்டை உடைத்து அதில் எதுவும் இல்லாததால் திரும்பிச் சென்றது தெரியவந்தது.  மேலும் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்தப் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகின்றன இது குறித்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.தற்போது கொள்ளையடிக்க வந்த அந்த நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.