ஆந்திர மாநில எம்.பி. அப்பாலநாயுடு, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல், மூன்றாவது குழந்தை பெற்ற தம்பதியினருக்கு ரூ.50,000 பரிசு வழங்குவேன்" என்று கூறினார். மேலும், அந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் ரூ.50,000 வழங்கப்படும். ஆண் குழந்தை பிறந்தால் ஒரு பசு பரிசாக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அவர் தனது சொந்த சம்பளத் தொகையிலிருந்து வழங்குவதாக கூறி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, விழியநகர் ராஜீவ் விளையாட்டுத் திடலில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்பாலநாயுடு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.