மதுரை மாவட்டம் கீழக்கரைப் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு காரணமாக ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டது.இந்த அரங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வந்தது.இந்நிலையில், அரங்கத்தின் அருகில் இருந்த பணியாளர்கள் தங்கும் பகுதியில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் தீயணைப்புத்துறையினர், தீயை விரைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்தத் திடீர் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்க வந்த மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது .இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.