தமிழகத்தில் பல பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. 3 இடங்களில் சதம் அடித்தது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களை குளிர்விக்கும் வகையில் மார்ச் 11ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மார்ச் 11 ம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.