தமிழகத்தில் பொது விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் அல்லாமல் சில முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாள், பிரபல கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றிற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் வருகிற 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வருகிற 10ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தினத்தில் அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.