சிறந்த தலைமைத்துவத்தை கௌரவித்து பிரதமர் மோடிக்கு விருது வழங்கிய பார்படாஸ்..!
Seithipunal Tamil March 07, 2025 08:48 AM

பிரதமர் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் அளிக்கப்பட்ட உதவி மற்றும்  பிராந்திய தலைமையை அங்கீகரிக்கும் வண்ணம் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டு பிரதமர் அமோர் மோடலி குறித்த விருதை வழங்கியுள்ளார். இதனை இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மர்ஹெரிட்டா பெற்றுக் கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:  இந்த விருதானது, இரு நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் நட்புறவை எடுத்துக் காட்டுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 20-இல் கயானாவில் நடந்த 02-வது இந்தியா கரிகோம் தலைவர்கள் மாநாட்டின் போது பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்குவதாக பார்படாஸ் அமோர் மோடலி அறிவித்து இருந்தார்.

அதன்படி, கோவிட் காலத்தின் போது, அவரது தலைமைத்துவத்திற்காகவும், மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.