#BREAKING : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 மீனவர்கள் கைது..!
Newstm Tamil March 07, 2025 05:48 AM

மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

இலங்கை கடற்படை 14 தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

மன்னார் தெற்கு கடற்பரப்பில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அனைவரையும் கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.