சீன நாட்டில் ஜின்ஹவ் சுவா என்ற 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்திற்கு படிப்பிற்காக சென்றார். அப்போது அவர் ஆன்லைன் டேட்டிங் செயலியில் பல பெண்களுடன் பழகி வந்தார். அதன் பின்னர் அந்தப் பெண்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அவர்களை மது குடிக்க வைத்து அளவுக்கு அதிகமாக போதை ஏற்றியுள்ளார். பின்னர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அவர் வழக்கமாக வைத்திருந்த நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். அவருடைய செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது 1270 ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரிய வந்தது. அதாவது பாலியல் பலாத்காரம் செய்யும் போது அதனை அவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக இவர் 60 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் டேட்டிங் செயலி போன்றவைகளை பெண்கள் மிகுந்த கவனத்துடன் பயன்படுத்துவது அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.