தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அரசு பள்ளியில் மாணவி ஒருவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் இரு தரப்பையும் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தகவல் அறிந்து வந்த ஏத்தாப்பூர் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், காதலித்த இளைஞரின் தங்கை அந்த மாணவியிடம், தனது அண்ணனை திருமணம் செய்து கொள்ளும்படியும் அவ்வாறு செய்தால் வழக்கிலிருந்து தப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது இதனையடுத்து போலீசார் இளைஞர், அவரது தந்தை காத்தவராயன், தங்கை உட்பட மூன்று பேரும் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இளைஞரின் தந்தை காத்தவராயன் என்பவரை போலீசார் கைது செய்து தலைமறைவாக உள்ள இளைஞர் மற்றும் அவரது தங்கையை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.