வருமான வரி சலுகை, இளைஞர் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு… மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்!
#featured_image %name%
இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது – என்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்
விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும்
மக்கானா உற்பத்தியை அதிகரிக்க மக்கானா வாரியம் அமைக்கப்படும்
நாடு முழுவதும் வேளான் உற்பத்தியில் சற்று பின் தங்கியுள்ள 100 மாவட்டங்களில் விவசாய மேம்பாட்டிற்காக புதிய திட்டம்
வேலை வாய்ப்புக்காக பிற இடங்களை தேடி செல்லாத சூழலை ஏற்படுத்தும் வகையில் மக்கள் அவர்கள் வாழக்கூடிய இடங்களிலே தொழில்துறையை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது
வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது
தாமரை விதைகளுக்கு புதிய வாரியம்! : தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும்
கிரெடிட் கார்டு உச்ச வரம்பு உயர்வு : கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது
அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்
இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்
ஆறாண்டுத் திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, மைசூரு பருப்புகளின் உற்பத்திற்கு முக்கியத்துவம்
தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
- பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கை
- பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்
- லாஜிஸ்டிக் மையமாக மாற்றமடையும் இந்திய அஞ்சல்துறை
- ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்!
- ஏ ஐ தொழில்நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்
- அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்
- உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்
- அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்
- ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு
- பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய வசதி
- முதல் முறையாக பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு ரூ.2 கோடி கடன் திட்டத்தை தொடங்க உள்ளோம்
- 120 புதிய இடங்களுக்கு உள்ளூர் விமான இணைப்பை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட UDAAN திட்டம் தொடங்கப்படும்; அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி கூடுதல் பயணிகளை உருவாக்கத் திட்டம்
- பீகாரில் உள்ள ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது
அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
- காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 100% ஆக உயர்த்தப்படும்
- புதுப்பிக்கப்பட்ட மத்திய KYC பதிவேடு 2025 இல் வெளியிடப்படும்.
ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை மறுஆய்வு செய்ய உயர் மட்டக் குழு அமைக்கப்படும்.
வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க தனி அமைப்பு உருவாக்கப்படும்
- சர்வதேச வர்த்தகத்திற்கான பாரத் டிரேட்நெட் அமைக்கப்படும்.
நகரங்களை சிறப்பான மையங்களாக மாற்றக்கூடிய வகையில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசு திட்டத்தை தொடங்க உள்ளது
- அணுஉலைகள் மூலம் 2047- ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு
- 52 சுற்றுலாத் தலங்கள் மாநில அரசின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்
மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
- பிகாருக்கு 3 புதிய விமான நிலையங்கள்
- ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது ஒன்றிய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது 2025- 26 நிதி ஆண்டில் நாட்டில் 200 புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்
- 37 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்கவரி விலக்கு
- Gig Workers என அழைக்கப்படும் உணவு டெலிவரி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள்
இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது.
- பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும்.
- AI மையங்கள் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு.
- பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
- உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
- பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன். நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் விதமாக புதிய வருமான வரி சட்ட மசோதா இருக்கும்
புதிய சட்ட மசோதாவில் பழைய சட்டத்தின் 50% விதிகள் இருக்கும்
- ”வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
- மாணவர்களுக்கு தாய்மொழியில் டிஜிட்டல் பாடங்கள் வழங்க திட்டம்
- முதியோருக்கான வட்டி வருவாயில் ₹1 லட்சம் வரை வருமான வரி கிடையாது
- சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலி – பட்ஜெட்டில் பீகாருக்கு குவியும் திட்டங்கள்!
- பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவுபடுத்தப்படும்
- பீகாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும்
- பீகார் மாநிலத்திற்கு என்று பிரத்யேக நீர்ப்பாசன திட்டங்கள்
- பாட்னாவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்
- லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து
எல்.இ.டி. திரைக்கான இறக்குமதி சுங்கவரி 20% ஆக அதிகரிப்பு
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு
ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
இனி மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை
- தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் ஆண்டு வாரியாக
2005: ₹1 லட்சம்
2012: ₹2 லட்சம்
2014: ₹2.5 லட்சம்
2019: ₹5 லட்சம்
2023: ₹7 லட்சம்
2025: ₹12 லட்சம்
- ஆண்டு வருமானம் ரூ.24 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்களுக்கு 30% வரிவிதிப்பு
- வரி மாற்றங்களால் நேரடி வரிகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படும்
- மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:
- மூத்த குடிமக்களுக்கு வருமானவரி கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1,00,000 ஆக உயர்வு.
- வாடகை மீதான வரி தள்ளுபடி ரூ.2.4 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்வு.
- ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை.
2023ல் 7 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமானம்- வரி விகிதம்
- ரூ.24 லட்சத்திற்கு மேல் – 30 சதவீதம்
- ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை- 25 சதவீதம்
- ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை- 20 சதவீதம்
- ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை- 15 சதவீதம்
- ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – ரூ.5 சதவீதம்
- ரூ.4 லட்சம் வரை- வரி இல்லை.
புதிய வருமான வரி முறையில் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை என்பது தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. கூடுதலாக ரூ.75 ஆயிரம் வரை நிலைக்கழிவும் கிடைக்கும். இது நடுத்தர வாழ் மாத ஊதியம் பெறும் மக்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும்
💥 சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி ₹30,000 -ஆக அதிகரிப்பு
₹0-4 lakh – Nil
₹4-8 lakh – 5%
₹8-12 lakh – 12%
₹12-16 lakh – 15%
₹16-20 lakh – 20%
₹20-24 lakh – 25%
Above 24 lakh – 30%
“கொண்டு வரப்பட உள்ள புதிய வரி சீர்திருத்தத்தில் நடுத்தர வருமான வகுப்பினருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்”
TDS முறையில் மாற்றம் செய்யப்படும்
- TCS இன் வரம்பு ₹7 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
- வாடகையில் TDS வரம்பு ₹6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
- கல்வி கடன்களில் TCS ஐ ₹10 லட்சம் வரை நீக்குவதற்கான திட்டம்
- புதிய வரி மசோதா வரி செலுத்துவோருக்குப் புரியும் வகையில் எளிமையாக இருக்கும்
புதிய வருமான வரி மசோதாவில் பழைய சட்டங்களில் உள்ள சரத்துகளில் 50 சதவிகிதம் இடம்பெறும் என்று மத்திய பட்ஜெட்டில் வருமான வரி மாற்றங்கள் குறித்து நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய விஷயங்கள் இவை.
News First Appeared in