முகத்தைப் பிரகாசமாக வைத்திருக்கப் பலரும் காப்பித் துாளை தங்களது முகத்தில் பூசிக் கொள்கிறார்கள்.
இணையத்தில் பரவிக்கிடக்கும் தகவல்களைத் தெரிந்து கொண்டு தற்போது பலரும் இது போன்ற ஹேக்குகளை முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், அவற்றை முயற்சிக்கும் முன் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சருமத்தின் வகையைப் பொருட்படுத்தாமல், காபி தூளைப் பயன்படுத்துவது தவறு. சமூக ஊடகங்களில் அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கும் பிரபல கன்டன்ட் கிரியேட்டர்கள், கருவளையங்களுக்கு ஒரு தீர்வாகக் காபியைப் பயன்படுத்துவதாகவும், சருமத்தை பிரகாசமாக்க இது ஒரு நல்ல ஹேக்காக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
ஆனால் இவர்கள் சொல்வது உண்மையா? இதைப் பின்பற்றலாமா எனப் பலரும் குழம்புகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மை குறித்து தோல் மருத்துவர் சொல்வதென்ன? அவரது அறிவுரைகளை இங்கே பார்ப்போம்.
சருமத்தில் காபி பயன்படுத்தப்படுவது ஏன்?:
ஷரீஃபா ஸ்கின் கேர் கிளினிக்கின் தோல் மருத்துவரும், அழகுசாதன நிபுணருமான டாக்டர் ஷரீஃபா சாஸ் இதுபற்றிக் கூறுகையில், காபி நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது.
குடிப்பதற்கு பயன்படுத்தப்படுவதை தாண்டி, சன்ஸ்கிரீன், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தை போக்க தயாரிக்கப்படும் கிரீம்கள் போன்ற பல தோல் மற்றும் அழகுசாதனப் பொருட்களிலும் காபி முக்கிய அங்கம் வகிக்கிறது.” என்று டாக்டர் ஷரீஃபா சாஸ் கூறினார்.
ஹெல்த்லைனின் கூற்றுப்படி, காபியை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்துவது, அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டதாகக் கூறப்படும் குளோரோஜெனிக் அமிலம் மற்றும் மெலனாய்டின்கள் காரணமாக உருவாகும் கரும் புள்ளிகள், தோல் சிவத்தல் மற்றும் தோல் சுருக்கங்கள் உள்ளிட்டவற்றைக் குறைக்க உதவும்.
எச்சரிக்கை:
சந்தேகத்திற்கு இடமின்றி, காபியில் இருக்கும் காஃபின், புற ஊதா கதிரிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது மற்றும் காயங்களைக் குணப்படுத்துகிறது. ஆனால், இதனை அதிகமாகப் பயன்படுத்துவது, சருமத்தில் கொலாஜன் இழப்புக்குக் காரணமாகலாம் என்று டாக்டர் ஷரீஃபா சாஸ் கூறினார்.
எனவே, வறண்ட மற்றும் சென்சிடிவான தோல் உள்ளவர்கள் காஃபின் அடங்கிய எந்தவொரு தயாரிப்பையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது தோலில் எரிச்சலை ஏற்படுத்தும்” என்றும் டாக்டர் ஷரீஃபா சாஸ் எச்சரித்தார்.
மேலும், இதனை நேரடியாகப் பயன்படுத்துவதால் தோல் சிவத்தல், முக வெடிப்புகள் மற்றும் முகப்பரு போன்ற பல தோல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கலாம்.
டாக்டர் ஷரீஃபா சாஸின் கூற்றுப்படி, காபியை முகத்தில் நேரடியாகப் பயன்படுத்துவது கண்களுக்குக் கீழே வறட்சியை உருவாக்கலாம், மேலும் சில சந்தர்ப்பங்களில் கண்ணீரையும் வரவைக்கலாம்.
மேலும், சென்சிட்டிவான சருமம் உள்ளவர்கள், தடிப்புகள், எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பல்வேறு அழற்சி பிரச்சனைகளை அனுபவிக்கலாம்.
இதே போன்று, கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு காரணி, காபியின் பிஎச் (pH) அளவாகும். “காபியில் ஒரு குறிப்பிட்ட பிஎச் உள்ளது, இது சருமத்தின் இயற்கையான சமநிலையை சீர்குலைக்கும். சருமத்தின் பிஎச் சமநிலை, அதன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், செயல்பாட்டிற்கும் இன்றியமையாதது, ஏனெனில் இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
இந்தச் சமநிலையை சீர்குலைப்பது தோல் வறட்சி, எரிச்சல் மற்றும் தோலில் தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கும்,” என்று பராஸ் ஹெல்த் குருகிராமில் உள்ள பிளாஸ்டிக், தோல் மருத்துவம் மற்றும் அழகுசாதன அறுவை சிகிச்சை துறையின் தலைவரான டாக்டர் மந்தீப் சிங் விளக்கினார்.
மேலும், காபியின் துகள்கள் சில நேரங்களில் மிகப் பெரியதாக இருக்கலாம். அதாவது, “காபி நன்றாக அரைக்கப்படாவிட்டால், அது துளைகளைத் தடுக்கலாம், இதனால் வெடிப்புகள் மற்றும் பிற தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
எண்ணெய் சருமம் அல்லது அதிகமாக முகப்பரு இருப்பவர்களுக்கு இது குறிப்பாகச் சிக்கலைத் தரலாம். ஏனெனில் அடைபட்ட துளைகள் இந்த நிலைமையை அதிகரிக்கக்கூடும்” என்று டாக்டர் மந்தீப் சிங் எச்சரித்தார்.
எனவே, உங்கள் முகத்தில் எந்தப் பொருளைத் தடவுவதற்கு முன்பும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம், ஏனெனில் உங்கள் முகத்தின் தோல் மிகவும் சென்சிட்டிவானதாக இருக்கும் மற்றும் எளிதில் வெடிப்புகளுக்கு உள்ளாகும்.
எனவே, அழற்சி பிரச்சனைகளைத் தவிர்க்க உங்கள் முகத்தில் புதிய கிரீம்கள், அல்லது இணையத்தில் பரவும் ஹேக்குகள் அல்லது வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது” என்று டாக்டர் ஷரீஃபா சாஸ் அறிவுறுத்தினார்.
காபித் தூளைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடும் போது சரும கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக ஜொலிக்கும். இப்போது சரும கருமையைப் போக்கி வெள்ளையாக்க உதவும் காபி ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. காபி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு கைகளை நீரில் நனைத்து, மென்மையாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.
2. காபி மற்றும் பால் ஃபேஸ் பேக்
* முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.
3. காபி, மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக் :
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு கைகளை நீரில் கழுவி, முகத்தை மென்மையாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போட்டு வந்தால், முகம் வெள்ளையாக இருக்கும்.
4. காபி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
5. காபி மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கும்.