தமிழகத்தில் திமுகவை எதிர்க்க தவெக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுடன் இணைந்த செயல்பட கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுகவை ஒழிக்க சிதறி கிடக்கும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.
வரும் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தங்களை முன்னிலைப்படுத்துவதை விட யார் வரக்கூடாது என்பதை அழுத்தமாக கொண்டு செயல்பட வேண்டும். நான் மூத்தவர் என்ற முறையில் நான் எல்லோருக்கும் கொடுக்கும் அட்வைஸ் தான் இது. யாரெல்லாம் திமுக வேண்டாம் என்று கருதுகிறார்களோ அவர்கள் தங்களை மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்துவதை விட திமுகவை ஒழிக்க செயல்படுவது நல்லது. திமுகவை ஒழிப்பதை அடிப்படை நோக்கமாக வைத்துக்கொண்டு நம் பாஜகவுடன் சேர்ந்து முயற்சியில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார்.