இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் விழா அனுசரிக்கப்பட்டது வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதையை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது தெரிவித்ததாவது:- மக்களை ஏமாற்றவும், தேர்தலுக்காகவும் தி.மு.க.வினர் அண்ணாவை பயன்படுத்துகின்றனர். பேரறிஞர் அண்ணாவின் பெயரைச் சொல்லக்கூட தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது.
ஈசிஆர் விவகாரத்தில் காவல்துறை மாறி மாறி தகவல் சொல்கிறது. தி.மு.க. அரசின் அழுத்தம் காரணமாக போலீசார் தவறான தகவல்களை கூறுகின்றனர். ஈசிஆர் விவகாரத்தை மூடி மறைப்பதற்காக இந்த திரைப்பட வசனம் எழுதப்பட்டிருக்கிறது.
வேங்கைவயலுக்கு செல்ல இனி பாஸ்போர்ட் தேவை போலிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2 ஆண்டு குழந்தை. அவருக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.