தலைநகர் டெல்லி முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது. பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி சட்டசபைக்கான தேர்தல் நாளை மறுநாள் 5-ந்தேதி புதன்கிழமை சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8-ந்தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . மேலும் இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது.தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் டெல்லியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கட்சிகள் அனைத்தும் ஒன்றின் மீது மற்றொன்று வைக்கும் குற்றச்சாட்டுகளால் பிரசார கூட்டங்களில் அனல் பறக்கிறது. மேலும் இந்த பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் ஓய்கிறது. எனவே தலைநகர் டெல்லி முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது என்று சொல்லலாம் . பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் முற்றுகையால் டெல்லி தேர்தல் களம் தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.