சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பும்ரா என்று அறிவித்துள்ளது. அதாவது பும்ராவுக்கு Sir Garfield Sobers Trophy விருதினை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த விருதினை பெறும் முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இந்த விருதை ஒவ்வொரு வருடமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த வருடம் பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் 3 வகை கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கியதால் தற்போது இந்த விருதை அறிவித்துள்ளது. மேலும் இந்த விருதை முன்னதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, டிராவிட் மற்றும் அஸ்வின் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.