ICC சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் சில பாதுகாப்பு காரணங்களால் இந்தியா அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தது. இதனால் இந்தியா அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது தொடக்க லீக் போட்டியில் பிப்ரவரி 20-ம் தேதி வங்காளதேசத்தையும், 23ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் 2ம் தேதி நியூசிலாந்தையும் எதிர்கொள்கின்றது. இந்த போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த அணியில் இளம் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் முதல்முறையாக 50 ஓவர் போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இன்னும் அறிமுகமாகாத அவரை நம்பி இப்போட்டிக்கு ரோகித் சர்மா தேர்வு செய்துள்ளார். அவருக்கு நான் தலை வணங்குவதாக இந்திய முன்னால் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அந்தப் பையன் ரண்களுக்காக பசியோடு இருக்கிறார். அவரைப் பார்க்கும்போது இந்த லெவலுக்கு ஆர்வத்துடன் வந்துள்ளதாக தெரிகிறது.
அவரை தேர்வு செய்த தேர்வாளர்களுக்கு குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு நான் தலை வணங்குகிறேன். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட அவரை இப்போட்டிக்கு எடுத்துள்ளீர்கள். அவர் கடின உழைப்பாளி என்று உங்களுக்கு தெரியும். அவர் விளையாட்டை வித்தியாசமாக அணுகுகிறார். அவர் போட்டிக்கு தயாராக உள்ளார். இதுதான் இந்தியா கிரிக்கெட்டின் அழகு. நீங்கள் கடினமாக உழைத்து நாட்டுக்காக விளையாடும் ஆர்வம் இருந்தால் எதாவது ஒரு பவர் உங்களை விளையாட வைக்கும். அதைத்தான் ஜெய்ஸ்வால் விஷயத்தில் ரோகித் செய்துள்ளார் என்று கூறினார்.