தந்தை மகனை எப்படி எல்லாம் வளர்க்கிறார்? அவனுக்கு அறிவுப்பூர்வமான விஷயத்தைக் கற்றுக் கொடுப்பவர் அவர் தான். அன்னை பாலூட்டி சீராட்டி பாசத்தைக் காட்டுவாள். தந்தை கண்டிப்புடன் அறிவையும் ஊட்டி வளர்ப்பார். உலகில் தன் மகன் சீரும் சிறப்புமாக வாழத் தேவையான அத்தனை விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பார்.
இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. ஒரு தந்தை தன் பிள்ளைகளை எந்தவித பிரதிபலனும் பார்க்காமல் தான் வளர்த்து படிக்க வைத்து பெரிய ஆளாக்குகின்றனர். அதே நேரம் அதைக் கடமையாகவும் செய்கின்றனர்.
இதே விஷயத்தை மற்ற யாருக்காவது செய்ய வேண்டி இருந்தால் அங்கு பிரதிபலனை எதிர்பார்ப்பார்கள். இதனால் தனக்கு என்ன லாபம்னு கேள்வி கேட்பார்கள். அந்தவகையில் தந்தை எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் மகனை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்றே விரும்புவார்.
அந்த வகையில் அப்படிப்பட்ட சிறப்பான தந்தையின் கடைசி காலம் எப்படி கழிகிறது என்று பார்த்தால் அது சோகமயமாகக் காட்சி அளிக்கும். அதன் ரத்தினச்சுருக்கமான கவிதையை அப்பாவின் கடைசி வார்த்தை என்ற தலைப்பில் இயக்குனர் சீனு ராமசாமி எழுதியுள்ளார். என்னன்னு பாருங்க…
மருத்துவமனையில் தன் கடைசி நாளில் சொல்ல வந்த சொல்லை சொல்ல முடியாது பிரிந்து போன தந்தையின் உயிர்… சொல்லாத சொற்களின் மௌனத்தை நினைக்கும் நேரமெல்லாம் இனம் புரியாத வேதனையின் கண்ணீர் மகனின் வாழ்வு முழுவதும் சுரக்கிறது. இதுதான் அந்தக் கவிதை. என்ன நெஞ்சைத் தொடுகிறதா?