லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத் நடித்த படம் விடாமுயற்சி. அவருடன் இணைந்து திரிஷா, அர்ஜூன், ரெஜினா காசன்ட்ரா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் கூடுதல் பலம் ஆக்ஷன் காட்சிகள்தான் என்று தெரிகிறது.
இதுதவிர படத்தில் சேஸிங் காட்சிகளும் அட்டகாசமாக உள்ளது. அஜீத் ஏற்கனவே பைக், கார் ரேஸர் என்பதால் இந்தக் காட்சிகள் வழக்கத்துக்கு மாறாக சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்கான பாசிடிவ் விமர்சனங்கள்தான் இதுவரை வந்து கொண்டுள்ளன. ஆக்ஷன் காட்சிகளும், மேக்கிங் விதமும் சூப்பராக இருப்பதாக சென்சார் குழுவினரே தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நாளை வெளியாக உள்ள படத்துக்கு ப்ரீ புக்கிங்கிலும் பெரிய வசூலை அள்ளியுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே நேரம் படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி வழக்கமான அஜீத் படம் என்ற எதிர்பார்ப்புடன் வராதீங்க.
இது வேற லெவல் படம் என்று சொல்லி இருக்கிறார். இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வகையில் அஜீத் அப்பவே அசல் படத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு டைட்டில் கார்டுலயே அறிவுரை கூறியுள்ளார்.
இப்படி எந்த நடிகரும் சொல்லவில்லை. அது என்னன்னா உயிரினும் மேலான ரசிகர்களே, புகை, மது இரண்டுமே தீங்கானது. திரைப்படத்தின் பாதிப்புகளில் கெட்டவைகளை அரங்கின் வாயிலோடு விட்டு விட்டு நல்லவைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் நல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி என்றென்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்களுடன் அஜீத்குமார் என்று ரசிகர்களின் நலன் கருதி தெரிவித்துள்ளார்.