நாளை விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸாகிறது. திரையரங்கு முழுவதும் ஒரே பரபரப்பாகத்தான் இருந்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தின் படம் ரிலீஸாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள். அதுவும் எந்தவொரு பண்டிகை நாளும் இல்லை. லீவு நாளும் இல்லை. வேலை நாளில்தான் படம் ரிலீஸாகின்றது. அப்படி இருந்தும் அனைத்து திரையரங்கிலும் ஹவுஸ் புல்லாக மாறியிருக்கிறது.
குறிப்பாக ஆந்திராவில் உள்ள நகரி என்ற ஊரில் எஸ்.ஜே. சினிமாஸ் என்ற திரையரங்கில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமானதில் இருந்து 30 நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்த்திருக்கிறது. இதே தியேட்டரில்தான் வேட்டையன் , கேம் சேஞ்சர் போன்ற பல பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸானது. ஆனால் அந்தப் படங்களுக்கு எல்லாம் இப்படி ஆனதே இல்லையாம்.
அஜித் படத்திற்குத்தான் 30 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகின்றது. அதே போல் அஜித் படங்கள் என்றால் இந்த தியேட்டரில் நிச்சயமாக 100 காட்சிகள் ஓடும் என்று சொன்னால் அது மாயாஜால் காம்ப்ளக்ஸ்தானாம். அங்கும் இப்போது கிட்டத்தட்ட 80 காட்சிகள் நிரம்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் அதிகாலை காட்சிகள் இல்லை என்பதால் நமது அண்டை மா நிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களுக்கு சென்றுதான் இங்குள்ள ரசிகர்கள் அதிகாலை காட்சிகளை பெரும்பாலும் பார்க்க போகின்றனர்.
குறிப்பாக ஆந்திரா சென்னைக்கு அருகில் இருப்பதால் அங்குதான் அதிகமான ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்டும் விற்பனை முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்திற்கு கூட இப்படி ஒரு புக்கிங் ஆனதே இல்லையாம். இதனால் அஜித்தின் விடாமுயற்சி படம் ஒரு மாஸ் ஓப்பனிங்காகத்தான் இருக்க போகிறது என்று சொல்கிறார்கள்.
மேலும் வெளி நாட்டில் சென்சாரில் படத்தை பார்த்தவர்களும் படம் நன்றாக வந்திருப்பதாக கருத்துதெரிவித்திருக்கிறார்கள். அதனால் இரண்டு வருடங்களாக காத்திருந்து விடாமுயற்சிக்கு கிடைத்த பலன் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.