போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதிப்பதுண்டு. அந்தந்த விதிமீறல்களுக்கு ஏற்றவாறு ரூ.100, ரூ.200 மாற்றும் ரூ.1000 முதல் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கு சாலை விதிகளை பின்பற்றாததால் ரூ. 1.61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, ஒரு இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபரின் வெவ்வேறு புகைப்படங்கள் இணைத்து இருந்தார். அதில் ஒருவர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி கடந்த வ்ருடம் வரை அபராதமாக 1.05 லட்சம் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வருடம் அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் அவருக்கு 1.61 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏன் இன்னும் அவரது வாகனத்தை பறிமுதல் செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவு வைரலான நிலையில், பயனாளிகள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.