திரிஷா: தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. தற்போது இவர் மறு அவதாரம் எடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டில் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் விஜய் ,சூர்யா ,அஜித் என இவர்களின் ஆஸ்தான ஹீரோயின் ஆக நடித்து வந்த திரிஷா இப்போதும் அதே ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மாஸ் காட்டி வருகிறார்.
தொடர் வெற்றி: யாருக்குமே இல்லாத ஒரு பெருமை தான் இது. ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோக்கள் அப்படியேதான் இருப்பார்கள். ஆனால் அவர்களுடன் நடித்த ஹீரோயின்கள் தான் காலத்திற்கு ஏற்ப மாறுபட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் திரிஷாவை பொறுத்த வரைக்கும் அப்போதிலிருந்து இப்போது வரை அதே ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் .
விஜய்யுடன் லியோ திரைப்படம். அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படம். சூர்யாவுடன் இப்போது ஒரு புதிய படம் என அடுத்தடுத்து பிசியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் திரிஷா .இவருடைய நடிப்பில் நாளை விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
ஐந்தாவது முறையாக: கிட்டத்தட்ட அஜித்துடன் நான்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்த திரிஷா விடாமுயற்சி திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஐந்தாவது முறையாக ஜோடியாக நடித்திருக்கிறார். அதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் திரும்பவும் அந்த ஒரு காம்போவை பார்க்க அனைவரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றார்கள் .இந்த நிலையில் திரிஷாவின் ஒரு பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது .
ஸ்கோப் இல்லை: அதில் விஜய் படத்தில் நடித்ததை பற்றி அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். திருப்பாச்சி படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்தில் எனக்கு ஸ்கோப்பே இல்லை என எல்லாருமே கூறினார்கள். தொடர்ந்து தமிழ்ல வர்ற ரோல்ஸ்லாம் அப்படித்தான் இருக்கு. ஆனா, இப்போ ஆதியில் எனக்கு ஸ்கோப் இருக்கிற ரோல் வந்தது. விஜய் கூட என்னிடம் இந்த படத்தில் எனக்கு சும்மா வந்து போகிற மாதிரி இருக்கு. நீங்கள்தான் அதிகம் ஸ்கோர் பண்ணுகிறீர்கள் என சொன்னார் .
இப்படிப்பட்ட படங்கள் செய்யத்தான் ஆசைப்படுகிறேன். அதான் அடிக்கடி சின்ன கேப் விழுந்து கொண்டே இருக்கிறது என திரிஷா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஆதி படத்திலும் இவருக்கு என்ன சோப் இருந்தது என்று த்ரிஷா இந்த மாதிரி பேசி இருக்கிறார் என கமெண்டில் கூறி வருகிறார்கள்