முருக பக்தர்கள் மீது கை வைத்தீர்கள் என்றால் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவீர்கள். அமைதியான முறையில் போராடிய முருக பக்தர்களை போராடிய முருக போராடிய முருக பக்தர்களை அமைச்சர் ரகுபதி மிரட்டுகிறார். உயர்நீதிமன்ற அனுமதியுடன் போராடிய முருக பக்தர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம் என்கிறார் ரகுபதி. இரும்புக்கரம் என்று கூறி முருக பக்தர்களை மிரட்ட பார்த்தால் அமைச்சர் ரகுபதி இருக்கும் இடம் அவருக்கே தெரியாமல் போய்விடுவார். அமைச்சர்களை எப்படி அடக்குவது என்று எங்களுக்கும் தெரியும். அமைச்சர் ரகுபதி வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்.
திமுக அரசு எத்தனை நாட்களுக்கு 144 தடை போட்டு எங்களை தடுக்க முடியும்? திமுக அரசு போட்ட தடைய மீறி நாளை காட்டாற்றுவெள்ளம் வரதான் போகிறது. அமைச்சர் சேகர்பாபு, ரகுபதி போன்றவர்கள் எல்லாம் வெட்கமே இல்லாமல் வீர வசனம் பேசிக் கொண்டிருக்கின்றனர். மிரட்டுறது , உருட்டுறது எல்லாம் திமுககாரன் கிட்ட வைத்துக்கொள்ளுங்கள். திருப்பரங்குன்றம் மலை பிரச்சனையை ஆரம்பித்தது யார் என்பதை சேகர்பாபுவும், ரகுபதியும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.