Erode & Delhi Election live: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் 5 மணி நிலவரப்படி 64.02 சதவீதம் வாக்குப் பதிவு
Vikatan February 06, 2025 01:48 AM

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் 5 மணி நிலவரப்படி 64.02 சதவீதம் வாக்குப் பதிவாகி உள்ளது.

ஈரோடு

டெல்லியில் பிற்பகல் 3 மணி வரை 46.55% வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

வாக்குப் பதிவு விவரங்களை பார்வையிட்டார் ஈரோடு கிழக்குத் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி.

நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி ஈரோட்டில் 42.41% வாக்குகள் பதிவு!

ஈரோடு கிழக்க சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

மனைவி மற்றும் தாய் தந்தையுடன் வந்து வாக்களித்த கெஜ்ரிவால்!

புது டெல்லி தொகுதியின் வேட்பாளரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், தனது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் சக்கர நாற்காலியில் பெற்றோர் கோபிந்த் ராம் கெஜ்ரிவால், கீதா தேவி ஆகியோருடன், லேடி இர்வின் சீனியர் செகண்டரி பள்ளிக்கு வந்து வாக்களித்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ``எனது பெற்றோர் வாக்களிக்க மிகவும் ஆர்வமாக இருந்தனர். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர். டெல்லியின் வளர்ச்சிக்காக வெளியே வந்து வாக்களிக்குமாறு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். டெல்லிக்காக உழைக்கிறவர் பொதுமக்களின் வாக்குகளைப் பெறுவார்." என்று கூறினார்.

காலை 11 மணி நிலவரப்படி டெல்லியில் 19.95 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

``தூய்மையான அரசியல் செய்வதாகப் பேசி டெல்லியில் மிகப்பெரிய ஊழல் செய்தது யார்?" - ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்களிடத்தில் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து, எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி, ``காங்கிரஸுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும், அரசியலமைப்புச் சட்டத்தை வலுப்படுத்தும், டெல்லியை மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். தூய்மையான அரசியல் செய்வதாகப் பேசி டெல்லியில் மிகப்பெரிய ஊழல் செய்தது யார்? வாக்களிக்கும் போது, மாசுபட்ட காற்று, அழுக்கு நீர், உடைந்த சாலைகளுக்கு யார் காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என்று ராகுல் பதிவிட்டிருக்கிறார்.

டெல்லியில் 8.10% சதவிகிதம் வாக்குகள் பதிவு!

டெல்லியில் காலை 9 மணி வரை 8.10 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

ஈரோட்டில் தற்போதுவரை 10.95% வாக்குகள் பதிவு!

காலை 9 மணி நிலவரப்படி 10.95 சதவிகிதம் வாக்குப் பதிவாகி உள்ளது.

குடும்பத்துடன் வந்து வாக்களித்த வி.சி.சந்திரகுமார்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வி.சி. சந்திரகுமார் குடும்பத்துடன் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் வாக்களித்தார்.

தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பு! தொடங்கியது ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் த்தேர்தல் வாக்குப்பதிவு!

ஈரோடு இடைத்தேர்தல்:

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2023-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் மீண்டும் எம்.எல்.ஏ-வான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு இறுதியில் உயிரிழந்ததைத்தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி (இன்று) டெல்லி சட்டமன்றத் தேர்தலோடு இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, த.வெ.க ஆகிய கட்சிகள் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டதால் தி.மு.க-வும், நா.த.க-வும் நேரடியாகத் தேர்தல் களத்தில் மோதும் சூழல் உருவானது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல்

தி.மு.க, கடந்த 2011-ல் தே.மு.தி.க சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்ற வி.சி.சந்திரகுமாரைக் களமிறக்கியிருக்கிறது. நா.த.க எம்.கே.சீதாலட்சுமி என்பவரை வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலையில் ஈரோட்டில் வாக்குப் பதிவு தொடங்கியது.

டெல்லி சட்டமன்றத் தேர்தல்:

டெல்லி சட்டமன்றத் தேர்தல் - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலையில் தொடங்கியிருக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்து களமிறங்குகின்றன. ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போராடிக்கொண்டிருக்கும் காங்கிரஸும், பா.ஜ.க-வும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இதனால், ஆம் ஆத்மி vs காங்கிரஸ் vs பா.ஜ.க என்ற மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.