OTT: தமிழ் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த ஓடிடி அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே நீங்கள் எதிர்பார்க்காத வகையில் ஓவர் எண்டெர்டெயின்மெண்ட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களால் களைக்கட்ட இருக்கிறது. அந்த வகையில் முதல் படமாக அனுஜா ஷார்ட் பிலிம் நெட்பிளிக்ஸில் ஃபிப்ரவரி 5ந் தேதி வெளியாக இருக்கிறது.
அனுஜா: இந்த ஷார்ட் பிலிம் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்பட்டு இருந்தது. கார்மெண்ட் பேக்டரியில் வேலை செய்யும் பெண்ணுக்கு பள்ளியில் சேர வாய்ப்புக் கிடைக்க அவர் எப்படி தன்னுடைய தங்கையுடன் அந்த சவாலை சமாளிக்கிறார் என்பதுதான் கதை.
மிசர்ஸ்: சான்யா மல்கோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் மிசர்ஸ் பிப்ரவரி 7ந் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது. திருமணமான பெண் கிச்சனிலேயே தன்னை தொலைத்துவிட்டதாக எண்ணி தன்னுடைய ஐடென்ட்டி குறித்து தேடும் கதை. ஆனால் ஏற்கனவே மலையாளத்தில் கிரேட் இந்தியன் கிச்சன் மிகப்பெரிய சூப்பர்ஹிட் அடித்த நிலையில் இது பெரிய வரவேற்பு பெறவில்லை.
தி மெக்தா பாய்ஸ்: அப்பா மற்றும் மகன் இருவரும் 48 மணி நேரம் நீண்ட பயணம் செய்கிறார்கள். அங்கு தங்களுக்கு இருக்கும் பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்ள நினைக்கும் அற்புதமான கதை. அமேசான் பிரைமில் ஃபிப்ரவரி 7ந் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் ஸ்ரேயா செளத்ரி, பொம்மன் இராணி நடித்துள்ளனர்.
மெட்ராஸ்காரன்: இரண்டு மனிதர்களுக்கு இடையில் நடக்கும் வாக்குவாதம் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு பிரச்னையாக உருவெடுக்கிறது. ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா, கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் ஆஹா ஓடிடியில் பிப்ரவரி 7ந் தேதி வெளியாக இருக்கிறது.
ஹாலிவுட் படமான தி ஆர்டர், இன்வென்சிபிள் திரைப்படங்கள் அமேசான் பிரைமிலும், ஸ்பென்சர் திரைப்படங்கள் நெட் பிளிக்ஸ் தளத்திலும் பிப்ரவரி 7ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்த வாரம் பெருமளவில் தமிழ் படங்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.