முன்னணி நடிகர்களுக்கு மட்டும்தான் கேரவன் கொடுக்குறாங்க. கமல் மாதிரி டாப்ல இருக்குற நடிகர்கள் தங்களுக்குத் தாங்களே கேரவனை வடிவமைத்துக் கொள்கிறார்கள். ஒரு குட்டி 7 ஸ்டார் ஓட்டலே கமலின் கேரவனுக்குள் இருக்கிறதாம். வாங்க பார்க்கலாம்.
திருப்திப்படுத்தவே முடியாது: சினிமாவுல கமலுக்குத் தெரியாத விஷயங்களே இல்லை. எல்லாரும் சொல்ற விஷயம் என்னன்னா அவரை திருப்திப்படுத்தவே முடியாது. அவரை திருப்திப்படுத்தணும்னா அவரை விட 2 மடங்கு கூடுதலா யோசிக்கணும். ஆனா சில நேரங்களில் அதையும் தாண்டி விடுவார். கமல் நடிப்புக்கு அப்பாற்பட்டு சில விஷயங்களில் கவனம் செலுத்துறாருன்னா அது கேரவன்தான்.
சொகுசு கேரவன்: அவருக்குன்னே தனித்துவமா கேரவன்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கு. பொதுவா இந்தக் கேரவனைப் பராமரிக்கிறவங்க கமலோட கண்கள் என்னென்ன தவறு இருக்குங்கறதை ஈசியா கண்டுபிடிச்சிடும்னு சொல்றாங்க. கமலோட சொகுசு கேரவன்ல 4 பக்கமும் குளிர்காற்று வரும் வகையில் ஏசி பொருத்தப்பட்டு இருக்கு. இந்தக் கேரவனைத் தான் பிரதமர் மோடி மகாபாலிபுரம் வரும்போது பயன்படுத்தினாராம்.
மினி 7 ஸ்டார் ஓட்டல்: முதல்வர் ஸ்டாலினுக்கு அவசரத் தேவைன்னாலும் இந்தக் கேரவனைத்தான் அனுப்புவாங்களாம். பிரத்யேகமா வடிவமைக்கப்பட்டு இருக்குற இந்தக் கேரவன் 1000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மினி 7 ஸ்டார் ஓட்டல் மாதிரி ஆடம்பரமான கேரவன் இது. மேக்கப் போடுறதுக்கு 2 ரூம் இருக்கு. அதுபோக டைரக்டர், தயாரிப்பாளர்னு யாராவது வந்தா அவங்களுக்குன்னு தனி மீட்டிங் ஹாலும் இருக்கு.
டெக்னிக்கலான வேலை: ஒவ்வொரு ரூமுக்கும் ஸ்பேர் ஏசி இருக்கு. வெளியே போகும்போது இந்த ஏசி ரிப்பேர் ஆகிட்டா என்ன செய்றது? அதுக்காகத் தான் இந்த மாற்று ஏற்பாடு. இந்தக் கேரவனை ஓட்டுறதுக்காக தனி பயிற்சி கொடுக்கப்பட்ட டிரைவர் இருக்காங்க. கேரவனில் டெக்னிக்கலான வேலை செய்ய தனி பயிற்சிகள் கொடுக்கப்பட்டு இருக்கு. அதுமட்டும் அல்லாம கமலுக்கு ஏதாவது திருப்தி இல்லாம இருந்தா உடனே சரிசெய்து விடுவார்களாம்.