மழை ஏறுபவர்களுக்கு செக்..! இனி எவரெஸ்ட் சிகரத்தில் தனியாக ஏற தடை..!
Newstm Tamil February 06, 2025 10:48 AM

எவரெஸ்ட் மலையேற்ற பயணங்களுக்கு, திருத்தப்பட்ட மலையேற்ற விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருவருக்கு ஒரு மலை வழிகாட்டி உடன் வருவது கட்டாயம் ஆகும். இதன் மூலம், எவரெஸ்ட் சிகரம் மற்றும் 8,000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட பிற மலை சிகரங்களில் தனி மலையேற்றப் பயணங்களை நேபாள அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

இது நேபாள அரசு மேற்கொண்ட மலையற்ற பயண ஒழுங்குமுறைக்கான ஆறாவது திருத்தம் ஆகும். இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

எவரெஸ்ட் சிகர பயண விதிமுறைகள்:

இனி தனியாக எவரெஸ்ட் மலையேற்றப் பயணங்கள் இல்லை

எவரெஸ்ட் உட்பட, 8,000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட சிகரங்களுக்கு, ஒவ்வொரு இரண்டு ஏறுபவர்களுக்கும் ஒரு உயர ஆதரவு ஊழியர்கள் அல்லது மலை வழிகாட்டி நியமிக்கப்படுவார்கள்.

மற்ற மலைகளின் பயணங்களுக்கு, ஒரு குழுவிற்கு குறைந்தது ஒரு வழிகாட்டியாவது தேவை.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.