பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக ‘E – Sharam’ கார்டு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி வருகிறது.
மேலும், 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் மாநில தொழிலாளர் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து அருகில் உள்ள தொழில்சார் அலுவலகத்தில் சென்று சமர்ப்பிக்கலாம்.
இ-ஷ்ரம் கார்டு பெற, எந்தவொரு தொழிலாளியும் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உங்களிடம் இ-ஷ்ரம் கார்டு இருந்தால் மத்திய அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறலாம். இந்த கார்டு உள்ளவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் நிதி உதவி வங்கிக் கணக்கில் வந்து சேரும். இந்த கார்டு உள்ளவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு கிடைக்கும். எதிர்காலத்தில் பென்சன் பெறுவதற்கும் தகுதி பெறலாம். விபத்துக் காப்பீடு, அடல் பென்சன் யோஜனா ஆகியவற்றின் பலன்களையும் பெற முடியும். 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மாதம் 3,000 ரூபாய் பென்சன் பெறலாம்.
இ-ஷ்ரம் திட்டத்துக்கான பட்டியலில் உங்கள்வ் பெயரைச் சரிபார்க்க முதலில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் கிளிக் செய்து உங்கள் இ-ஷ்ரம் கார்டு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். அடுத்த பக்கத்திற்குச் சென்று 'e-Shram Card Payment List' என்பதைப் பார்க்க வேண்டும். உடனே கட்டண பட்டியல் திறக்கும். இதில் உங்கள் பெயர் விவரங்களைப் பார்க்கலாம்.