நான் சீமானை பத்தி பிரச்சாரத்துல பேசவே இல்ல… ஆனா அவரோட நோக்கமே இதுதான்…
SeithiSolai Tamil February 06, 2025 11:48 AM

இவ்வளவு நாளாக அமைதியாக இருந்த சீமான் இப்போ எதுக்கு இப்படி பேசுறாரு என்று ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பத்திரிகை வாயிலாக தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு இதெல்லாம் தெரியனும். எப்பொழுதும் எங்களை தான் குறை சொல்லுவாங்க. திமுக அப்படி பண்றாங்க இப்படி பண்றாங்க என்று .ஏதாவது தவறு இருந்தால் தவறான செயல்பாடுகள் இருந்தால் சொல்ல முடியுமா? நாம் தமிழர் கட்சி எப்படி இருக்கிறார்கள் என்றால், “தாயை போல பிள்ளை நூலை போல சேலை” என்ற பழமொழி போல அவங்களுக்கு தான் அது பொருந்தும். இதுவரை சீமானை பற்றி நான் பேசவில்லை. சீமான் அவர்கள் தொடர்ந்து ஈரோட்டில் பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த பரப்பரையில் எங்கேயாவது ஏதேனும் ஒரு உண்மை இருந்ததா ?என்று பாருங்கள் அவருடைய நோக்கமே.

இங்கே ஆர் எஸ் எஸ், பாஜக அதிகார கும்பல் வந்து எங்கெங்கெல்லாம் ஏதேனும் பிரச்சனை உருவாக்கி மத ரீதியான பிரச்சனை உருவாக்கி கட்சியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதே போல எங்கே வந்து எந்த பிரச்சனையை சொன்னால் தகராறு வரும் பெரிய அளவில் கலவரம் வரும் என்பதை போன்ற எண்ணத்தை தான் சீமான் கொண்டு வந்தார். சீமானுக்கு வேறு எண்ணம் எல்லாம் இல்லை. இவ்வளவு நாள் அமைதியாக இருந்த சீமான் ஈரோடு எதற்காக பெரியாரைத் தொட வேண்டும், இது எதற்காக சொல்கிறார் என்றால் ஒட்டுமொத்தமாக பெரிய பிரச்சனை உருவாக்கி அதன் மூலம் அனுதாபத்தை தேடி இதில் தான் ஏதாவது அரசியல் ஆதாயம் தேட முடியுமா என்று நினைக்கிறார்” என்று பேசியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.