விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள், டீசர், டெய்லர் என்பன ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் அஜித்தின் தோற்றம் அதில் நடந்த, கார் ரேஸ், அர்ஜுனனின் கம்பீரம் மற்றும் த்ரிஷாவின் காதல் ஆகியவை சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்றைய தினம் படம் வெளியான போதும் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்ற படத்தின் ரீமேக் என சொல்லப்பட்ட போதும் அதில் அஜித் குமாரின் ஆக்சன், நடிப்பு என்பன ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித்தின் படம் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் தியேட்டருக்கு வெளியே பிரம்மாண்டமாக பெரிய கட்டவுட் வைத்து அதற்கு பால் அபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனால் அவர்களுடைய பாதுகாப்புக்கு காவல்துறையினரும் துணை நிற்கின்றனர்.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் நடித்த திரிஷா படத்தை பார்ப்பதற்காக குரோம் பேட்டை வெற்றி திரையரங்கிற்கு சென்றுள்ளார். தற்போது அவர் படம் பார்க்க சென்ற காட்சியும், அங்கு படத்தை என்ஜாய் பண்ணி அவர் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளன.