அமெரிக்க கப்பல்களுக்கு இனி கட்டணம் இல்லை... மிரட்டலுக்கு பணிந்தது பனாமா நாடு..!
WEBDUNIA TAMIL February 06, 2025 08:48 PM


அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பனாமா கால்வாயில், அமெரிக்க கப்பலுக்கு கட்டணம் விதிப்பதா என தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் பேசி வந்தார். தற்போது, பனாமா நாடு அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்து, அமெரிக்க கப்பல்களுக்கு கட்டணம் இல்லை என்று அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ள பனாமா கால்வாய், கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கிறது. அமெரிக்க வர்த்தகத்தில் இந்த கால்வாய் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கால்வாய் அமெரிக்காவின் நிதியால் வெட்டப்பட்ட நிலையில், நீண்ட காலம் அமெரிக்காவால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. பின்னர், 1999ஆம் ஆண்டு, அமெரிக்கா இதை பனாமாவுக்கு வழங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் 14 ஆயிரம் கப்பல்கள் இந்த கால்வாய் வழியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க கப்பல்களே 75% செல்கின்றன. இதுவரை, பனாமா நாடு அமெரிக்காவிடமே கட்டணம் வசூலித்து வந்தது. டொனால்ட் டிரம்ப் முதன்முறையாக இதற்கு எதிராக குரல் கொடுத்தார்.

சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்ததையடுத்து, பனாமா நாடு தற்போது அமெரிக்க அரசுக்குச் சொந்தமான கப்பல்கள் அனைத்தும் கட்டணமின்றி கால்வாய் வழியாக செல்லலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.