BSNL, MTNLக்கு சொந்தமான ரூ.16 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க முடிவு! ஏன் தெரியுமா?
WEBDUNIA TAMIL February 06, 2025 10:48 PM

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL, MTNLன் சொத்துகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மற்றும் மகாநகர் டெலிபோன் நிகம் லினிடெட் (MTNL) நிறுவனங்கள் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கி வந்த எம்டிஎன்எல் நிறுவனத்தை முறையாக BSNLஉடன் ஜனவரியில் இணைக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

தற்போது எம்டிஎன்எல்லின் கடன் நிலைமை மோசமாக உள்ள நிலையில் அதன் மொத்த கடன் ரூ.31,944 கோடியாக உள்ளது. இதில் இந்தியன் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை தவணை மட்டும் ரூ.5,726.29 கோடியாகும். இந்த தவணைகளை திரும்ப செலுத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளதால் எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல்லின் சொத்துக்களை விற்று ரூ.16 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய பொது நிறுவனங்கள் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.