இப்படி எல்லாமா பண்ணுவாங்க..காயமடைந்த சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிகுயிக் தடவிய நர்ஸ்!
Seithipunal Tamil February 07, 2025 12:48 AM

கன்னத்தில் காயமடைந்த சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிகுயிக் தடவிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெவிகுயிக் தடவிய நர்சை பணியிடமாற்றம் செய்து ஹவேரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவிட்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹவேரி அருகிலுள்ள அடூர் ஆரம்ப சுகாதார மையத்தில் காயமடைந்த சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக சென்றான். அப்போது அங்கு பணியில் இருந்த நர்ஸ் சிறுவனின் காயத்துக்கு மருந்தாக பெவிகுயிக் போட்டு அனுப்பியுள்ளார்.

அதனை தொடர்ந்து வீடு திரும்பிய சிறுவனிடம், நடந்தது குறித்து அவன் பெற்றோர் விசாரித்தனர். அப்போது சிறுவன் நடந்ததைக் கூறினான்.இதுதொடர்பாக பெற்றோர் உடனடியாக நர்சிடம் சென்று விசாரித்தனர். அப்போது, தையல் போட்டால் குழந்தையின் கன்னத்தில் தழும்பு ஏற்படும் என்பதால் பெவிகுயிக் தடவினேன் என கூறினார் அந்த நர்ஸ்.இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது பரவியதை தொடர்ந்து, நர்சை பணியிடமாற்றம் செய்து ஹவேரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவிட்டார்.கன்னத்தில் காயமடைந்த சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிகுயிக் தடவிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.