தமிழ்நாட்டில் வனத்துறையின் கீழ் செயல்படும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கான (Anti-Poaching Watchers) மாத ஊதியம் ₹12,500ல் இருந்து ₹15,625-ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் 669 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பயனடைவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரலாம் என்று கூறப்படும் நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழவை அங்கீகரித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பல லட்சம் ஊழியர்கள் இந்த அறிவிப்பிற்காக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவுகளை மாற்றியமைக்க 8 வது ஊதியக் குழுவை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 8-வது ஊதியக் குழுவை அமைக்கும் முடிவை பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் எடுத்ததாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுக்கு இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக பலன் கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. 6வது ஊதியக் குழுவில் 7,000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களுக்கு தற்போது குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 18,000 ரூபாய் கிடைக்கிறது. 8வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச சம்பளம்: இப்படிப்பட்ட நிலையில்தான் 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது.
7வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 ஃபிட்மென்ட் காரணி உள்ளது. இது 8வது ஊதியக்குழுவில் குறைந்தது 2.86 பிட்மென்ட் காரணியாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 2.86 என்ற ஃபிட்மென்ட் காரணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் அதிகரித்து ரூ. 51,480 ஆக இருக்கும், இது தற்போதைய ரூ.18,000 உடன் ஒப்பிடும் போது 186 சதவீதம் உயர்வு ஆகும்,
1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஆவலுடன் காத்திருந்தனர். இது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்.
7வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததில் இருந்து 10 ஆண்டுகள் இடைவெளியுடன், அடுத்த ஊதியக் குழுவை 2025 அமல்படுத்த வேண்டும். பொதுவாக இரண்டு வெவ்வேறு ஊதியக் கமிஷன்களை அமல்படுத்துவதற்கு இடையே 10 ஆண்டுகள் இடைவெளியை மத்திய அரசு பின்பற்றுகிறது. ஆனால், அடுத்த ஊதியக் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் இருந்தது. லோக்சபா தேர்தல் முடிந்து, மோடி 3.0 தலைமையில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்த சலசலப்பு வலுத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது போக இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.