காங்கோவில் உள்ள கோமா நகரில் மான்செஸ் சிறைச்சாலை உள்ளது.இந்த சிறையில் உள்ள 100க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததோடு தீ வைத்து எரித்து கொன்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் ருவோண்டோ ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிறைச்சாலைக்குள் நுழைந்துள்ளனர். அப்போது அங்கு கலவரம் வெடித்த நிலையில் ஏராளமான ஆண் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்து சென்ற நிலையில் பெண் கைதிகளை பலாத்காரம் செய்துள்ளனர்.
அதோடு பெண்கள் சிறைச்சாலையை தீ வைத்தும் கொளுத்தியுள்ளனர். இதில் ஏராளமான பெண்கள் உயிரிழந்ததாக ஐநா அமைதி பேச்சு வார்த்தை குழுவின் துணைத் தலைவர் விவியன் டி பெர்ரோவின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக விசாரணை நடத்த ஐநா குழு சிறைக்கு செல்ல முயன்ற போது கிளர்ச்சியாளர்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததால் அங்கு செல்ல முடியவில்லை.மேலும் கிட்டதட்ட 2000 பேரின் உடல்களை சிறைச்சாலையில் அடக்கம் செய்ததாகவும் அவர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.