IND vs ENG: 'பும்ரா மாதிரி என்னால விளையாட முடியாது, ஆனா...' - ஹர்திக் பாண்டியா சொல்வதென்ன?
Vikatan February 07, 2025 12:48 AM
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இன்று ஆரம்பமான (பிப்ரவரி 6) முதல் போட்டி ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, “இந்திய அணிக்காக விளையாடும்போது நெருக்கடியை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நான் சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது ஹார்டிக் பாண்டியாவாக தனி ஒருவனுக்காக விளையாடவில்லை. என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன்.

ஹர்திக் பாண்டியா

இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய குறிக்கோள். நாம் எவ்வளவு விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. நமது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே முக்கியம். பும்ரா போன்று என்னால் மிகச் சிறப்பாக பந்துவீச முடியாது.

ஹர்திக் பாண்டியா

ஆனால் எனக்கு தெரிந்ததை வைத்து ஒவ்வொரு பந்திலும் விக்கெட் எடுக்க நினைக்கிறேன். அதுவும் நமது இந்திய அணி  வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான்” என்று ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.