இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தபடியே உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி கொள்ள முடிகிறது. இதனால் பல நிறுவனங்களும் போட்டி போட்டு வியாபாரத்தை பெருக்கி வருகின்றனர். அதில் zomato நிறுவனமும் ஒன்று. தற்போது இந்த நிறுவனம் அதன் பெயரை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நிறுவனம் அதன் பெயரை ETERNAL என்று மாற்றியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தீபிந்தர் கோயல் தலைமையிலான இந்த நிறுவனம் உள்நாட்டில் 2 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு அதன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் இந்த மாற்றத்தை ஆதரிக்குமாறு அந்நிறுவனத்தின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இது அங்கீகரிக்கப்பட்டால் எங்கள் நிறுவன வலைதளம் zomato.com-யில் இருந்து eternal.com ஆக மாற்றப்படும். எங்கள் பங்கு டிக்கரை zomatoவில் இருந்து eternal ஆக மாற்றுவோம். eternal மொத்தம் நான்கு முக்கிய வணிகங்களை உள்ளடக்கியது. அதாவது ஜொமேட்டோ, blinkit, district மட்டும் hyperpure என அதில் தெரிவித்துள்ளார். தற்போது zomato அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் தெனாப்பிரிக்கா உட்பட 24-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதன் கிளைகளை விரிவுப்படுத்தி உள்ளது.