ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்.இவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஆன இவர் 50 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் இனி டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவதாகவும் கூறியுள்ளார்.
இவர் இதுவரை 74 ஒருநாள் தொடர்களில் விளையாடி உள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் இடம் பெற்றிருந்தார். மேலும் இவர் திடீரென ஓய்வு அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.